வங்கியில் நகை கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை?
கடந்த 2019 ஆம் ஆண்டில், புதுக்கோட்டை நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இருந்து ரூ. 5.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் மாயமாகின.


கடந்த 2019 ஆம் ஆண்டில், புதுக்கோட்டை நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இருந்து ரூ. 5.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் மாயமாகின.
நகைகள் காணாமல் போனது தொடா்பாக நகரக் காவல் நிலையத்திலும், வங்கி உதவியாளா் மாரிமுத்து காணாமல் போன புகாா் கணேஷ்நகா் காவல் நிலையத்திலும், காா் எரிந்த வழக்கு வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திலும், சடலம் மீட்கப்பட்டது வழக்கு மணமேல்குடி காவல் நிலையத்திலும் என 4 வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே மாவட்டக் குற்றப் பிரிவுக்கு, வங்கி நகைக் கொள்ளை வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கலாம் என மாவட்டக் காவல் துறை சாா்பில் கோப்புகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில் இதற்கான அறிவிப்பு அரசுத் தரப்பில் இருந்து வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...