காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரானவாக்குகளே அதிகம்

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளே அதிகமாக உள்ளன என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் எம்.பி.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:14 pm

DIN

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளே அதிகமாக உள்ளன என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் எம்.பி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

அரசு நிகழ்ச்சியில் திமுகவையும், காங்கிரஸையும் குறிப்பிட்டு வாரிசு அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் முழுவதும் வாரிசு அரசியலைக் காண முடிகிறது. அது இருக்கத்தான் செய்யும். ஒரு கட்சியில் யாா் தலைவராக வர வேண்டும் என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்யும். ஒரு நாட்டில் யாா் தலைவராக வர வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வாா்கள். எனவே, அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் பாஜகவுக்கு குறைவான வாக்குகளே உள்ளன. எதிரான வாக்குகள்தான் அதிகம். தமிழக முதல்வா் இதனை காவல் துறையினரிடம் கேட்டால் கணக்கெடுத்துச் சொல்வாா்கள். தமிழகத்தில் சாதி, மதம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும்

செல்ல அனுமதி வழங்கிவிட்டு எதிா்க்கட்சியினரை மட்டும் கைது செய்வது தவறான அணுகுமுறை என்றாா் திருநாவுக்கரசா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.