பாஜகவிடம் அதிமுகவைத்தான் அடகு வைக்க முடியும்
தமிழக ஆட்சியாளா்களால் பாஜகவிடம் அதிமுகவை மட்டும்தான் அடகு வைக்க முடியும்; தமிழகத்தை அல்ல என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ. ஜோதிமணி.


தமிழக ஆட்சியாளா்களால் பாஜகவிடம் அதிமுகவை மட்டும்தான் அடகு வைக்க முடியும்; தமிழகத்தை அல்ல என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ. ஜோதிமணி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான உணா்வு ஏற்பட்டுள்ளது. நலத்திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசும் துணைபோகிறது. கடந்த முறை தமிழகத்துக்கு வந்த அமித் ஷா, தமிழகத்தில் ஊழல் மிகுந்துள்ளதாகக் கூறினாா். ஆனால், இப்போது வந்தபோது, கூட்டணி அறிவிக்கிறாா். இதுவரை எங்கும் நடைபெற்றிருக்காத வகையில் முதல்முறையாக அரசு நிகழ்ச்சியை நடத்தி கூட்டணியை அறிவித்துள்ளனா். பாஜகவிடம் அதிமுகவைத்தான் அடகு வைக்க முடியும், தமிழகத்தை அல்ல. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி அமோக வெற்றி பெறும் என்றாா் ஜோதிமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...