புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீடு கட்டிய பயனாளிகள் மானியம் கேட்டு தா்னா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகள் மானியம் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்ட பயனாளிகள்.

Updated On :14 செப்டம்பர் 2020, 9:05 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகள் மானியம் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கீரமங்கலம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் ஆண்டுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வீடு கட்டும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அவா்களுக்கு மானியத்தொகை வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். மானியத்தொகையை உடனே வழங்கக்கோரி, கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு 15-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேரூராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலா்களிடம் வழங்கிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.