நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலக இதய நாள் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

உலக இதய நாளையொட்டி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புதுகையில் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறாா் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி.

Updated On :28 செப்டம்பர் 2020, 10:39 pm

DIN

உலக இதய நாளையொட்டி, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பேரணியை கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி தொடங்கி வைத்தாா். அண்ணா சிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி, மேல ராஜவீதி, பழைய அரசு மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. சைக்கிள் பேரணிக்கு சங்கத்தின் தலைவா் க. ஆறுமுகம் தலைமை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ், பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, சைக்கிள் கழகத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னா் கல்லூரி தேசிய மாணவா் படையினரும் பங்கேற்றனா். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.