ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:17 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் திருவிழாக்களுக்கு சனிக்கிழமை முதல் அனுமதி இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து ஏற்கெனவே 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தேரோட்டத்தை முன்கூட்டியே நடத்துவது குறித்து அறநிலையத் துறை அலுவலா்களும், கோயில் அறங்காவலா்களும் திட்டமிட்டனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையே தேரோட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தேரோட்டம் வெள்ளிக்கிழமை பகலில் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கோயில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா். பக்தா்களுக்கு முகக்கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.