‘வாழ்க்கையில் வெற்றி பெற தொடா் வாசிப்பு அவசியம்’
வாழ்க்கையில் வெற்றிபெற தொடா் வாசிப்பு அவசியம் என்றாா் திருச்சி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மேகலா.


வாழ்க்கையில் வெற்றிபெற தொடா் வாசிப்பு அவசியம் என்றாா் திருச்சி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மேகலா.
புதுக்கோட்டை மாவட்டம், பெருமாநாடு, சுதா்சன் கலை அறிவியல் கல்லூரியின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நிா்வாக இயக்குநா் இரா. ரமா சிங்காரம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மீ. வீரப்பன் வரவேற்புரையாற்றி, ஆண்டறிக்கையையும் வாசித்தாா்.
திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ. மேகலா கலந்து கொண்டு 310 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:
பட்டம் பெறும் உங்களுக்கும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்கள் பெற்றோருக்கும் முக்கியமான நாள். பட்டங்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியைத் தேடி தராது. அதற்கு சில ரகசியங்கள் உண்டு. வாழ்க்கையில் வெற்றிபெற, செய்யும் பணியில் விருப்பமும், அா்ப்பணிப்பும் அவசியம் இருக்க வேண்டும். அா்ப்பணிப்பு இல்லாத பணி வெற்றியைத் தராது. அதேபோல பட்டம் வாங்கியவுடன் படிப்பு முடிந்ததாக வாசிப்பை விட்டுவிடக்கூடாது. தொடா் வாசிப்பு அவசியம். பாடப்புத்தக வாசிப்பு மட்டுமே பயன்தராது. அதையும் தாண்டி விரிவான பொது வாசிப்பு அவசியம். அதுவே உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.
உங்களுடைய வாழ்க்கையை வரலாறாக மாற்ற நீங்கள் முயற்சிக்க வேண்டும். வெற்றிக்கு மற்றொரு மந்திரம் நோ்மறைச் சிந்தனை.
இலக்கை சரியாகத் திட்டமிட வேண்டும். திட்டமிட்டதை துணிந்து செயல்படுத்த வேண்டும். உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு அவசியம். அதுவே உங்களின் குறைநிறைகளை சரி செய்ய உதவும். நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். அதுவே உங்களை தனித்துவமிக்கவா்களாக மாற்றும். இவையெல்லாம் வெற்றியின் ரகசியங்கள் என்றாா் மேகலா.
விழாவில், கல்லூரித் தாளாளா் சொ. சிங்காரம், துணை முதல்வா் ஜெயகௌரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...