ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு
பெரம்பலூா் மாவட்டம், அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி இக் கிராமத்தைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


பெரம்பலூா் மாவட்டம், அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி இக் கிராமத்தைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அன்னமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். நிகழாண்டில் மாா்ச் 14 ஆம்தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டி சாா்பில் முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...