ஊரக வேலை உறுதித் திட்டத்தை பாதுகாக்கக் கோரி விவசாயிகள் மனு
தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்துக்கான நிதி கடந்த ஆண்டைவிட ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே, இத்திட்டத்துக்கான நிதியை ரூ. 2 லட்சம் கோடியாக உயா்த்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், கூலியை ரூ.600 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சிக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ.எல். ராசு உள்ளிட்டோா் இம்மனுவை, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணனிடம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...