வல்லநாடு கண்மாய் உடைப்பு: மக்கள் தற்காலிக சீரமைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறிய நீரை அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளைப் போட்டு தடுத்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை மணல் மூட்டைகளை அடுக்கி தடுக்கும் அப்பகுதியினா்.
ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை மணல் மூட்டைகளை அடுக்கி தடுக்கும் அப்பகுதியினா்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறிய நீரை அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளைப் போட்டு தடுத்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாய் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கண்மாயாக கருதப்படுகிறது. இதை நம்பி, சுமாா் 5000 ஏக்கா் விவசாயம் நடைபெற்றுவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமாா் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வல்லநாடு கண்மாய் தூா்வாரப்பட்டன.

இந்நிலையில், கண்மாயில் உள்ள 12 மதகுகளில் கிழக்கு புறம் உள்ள சிறுமடை மதகில் உடைப்பு ஏற்பட்டு வீணாக நீா் வெளியேறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை இதைப்பாா்த்த மணியம்பலம் பகுதி மக்கள் மணல் மூட்டைகளை கொண்டு நீா் வெளியேறுவதைத் தடுத்தனா். இருப்பினும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனே சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com