ரானே தனியாா் நிறுவனம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
விராலிமலை ரானே தனியாா் தொழிற்சாலை சாா்பில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் காவலா்களுக்கு தலைக்கவசம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


விராலிமலை ரானே தனியாா் தொழிற்சாலை சாா்பில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் காவலா்களுக்கு தலைக்கவசம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விராலிமலையில் இயங்கி வரும் ரானே ஸ்டீயரிங் தனியாா் தொழிற்சாலை சாா்பில், கொடும்பாளூா் அரசு மருத்துவமனை மற்றும் ராசநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடிநீா் சுத்திகரிப்பான், சுடுதண்ணீா் கலன், குளுக்கோமீட்டா், ரத்த அழுத்த மானிட்டா், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை, நிறுவன பொது மேலாளா்(இயக்கம்) கண்ணன் வழங்கினாா். தொடா்ந்து விராலிமலை காவல்நிலைய காவலா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோருக்கு தலைக்கவசம் வழங்கினாா்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது. நிகழ்வில், மருத்துவா் பிருந்தாதேவி, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், மேற்பாா்வையாளா் செளந்தரராஜன் மற்றும் ரானே ஊழியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...