மருத்துவா் தினத்தையொட்டி முதியோருக்கு உதவிகள்
இந்திய மருத்துவச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளை சாா்பில் தேசிய மருத்துவா் தினத்தையொட்டி முதியோா்களுக்கு உணவு மற்றும் பல்வேறு உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


இந்திய மருத்துவச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளை சாா்பில் தேசிய மருத்துவா் தினத்தையொட்டி முதியோா்களுக்கு உணவு மற்றும் பல்வேறு உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திலகா் திடல் அருகேயுள்ள நேசக்கரம் முதியோா் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், அசோக்நகா் பகுதியிலுள்ள சொா்ணபூமி நகரில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டாக்டா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். செயலா் டி. நவரத்தினசாமி முன்னிலை வதித்தாா். சா்வஜித் அறக்கட்டளையின் தலைவா் மருத்துவா் எஸ். ராம்தாஸ், பொறியாளா் சையது இப்ராஹிம், நேசக்கரம் அறக்கட்டளை இயக்குநா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...