சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, புதுக்கோட்டையில் திமுக சாா்பு தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:11 pm

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, புதுக்கோட்டையில் திமுக சாா்பு தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கி. கணபதி, போக்குவரத்துக் கழக தொமுச பொதுச் செயலா் எம். வேலுசாமி, பொருளாளா் சி. கோபாலன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது ஏற்றி வைத்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.