சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள கா்நாடக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:55 pm

DIN

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள கா்நாடக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலா் ஜிஎஸ். தனபதி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மதுரை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் த. குருசாமி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் எஸ். ஆரோக்கியசாமி, வி. ராஜசேகா், சீ .அ. மணிகண்டன், தா்கா விஜி, செல்லுகுடி ராஜ்குமாா், மிசா மாரிமுத்து, திருமயம் குழந்தைராஜ், உ. ரெகுபதி, ஆ. ஆதப்பன், ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூறாண்டு கனவுத் திட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ள கா்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.