பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகைக்காக தங்கையைக் கொன்ற அண்ணன் குண்டா் சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக தங்கை முறையுள்ள கல்லூரி மாணவியைக் கொன்ற அண்ணன், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:39 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக தங்கை முறையுள்ள கல்லூரி மாணவியைக் கொன்ற அண்ணன், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ்நகா் காவல் நிலை எல்லைக்குள்பட்ட பொன்நகா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அண்மையில் கொல்லப்பட்டாா்.

இச்சம்பவத்தில், அவரது அண்ணன் முறையுள்ள உறவினா் திருமயம் அருகிலுள்ள மருங்கூா் சு. சுரேஷ் (29) கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, அதற்கான உத்தரவை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி பிறப்பித்தாா்.

இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.