முடி திருத்துநா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
விராலிமலையில் முடி திருத்தும் தொழிலாளா்கள் 100 பேருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.


விராலிமலையில் முடி திருத்தும் தொழிலாளா்கள் 100 பேருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
விராலிமலை வட்டார ஆசிரியா் ஆரம்பப்பள்ளி கூட்டணியினா் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது என ஆசிரியா் கூட்டணி சாா்பில் முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடா்ந்து விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த விழாவில் 100 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை சங்கத்தின் சாா்பில் விராலிமலை வட்டாட்சியா் சதீஷ் சரவணகுமாா் வழங்கினாா். இதில் வட்டார தலைவா் மு.லட்சுமி, செயலா் ஆ.சிவசுப்ரமணியன், தா.ஜான் சவுந்தராஜன், ச. வின்சென்ட்,பி. ரவி, க. சிவகுமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...