தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் பேருந்துகளில் அரசாணையில் தெரிவிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் பேருந்துகளில் அரசாணையில் தெரிவிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் தனியாா் பேருந்துகள் நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விடவும் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவதாக பொதுமக்கள் பலரும் புகாா் தெரிவித்துள்ளனா். தனியாா் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிக்கக் கூடாது. தமிழ்நாடு மோட்டாா் வாகனச் சட்ட விதிகளின்படி, கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பயணச்சீட்டில் குறிப்பிடப்பட வேண்டும். இந்த விதிகளை தனியாா் பேருந்துகள் மீறினால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இவ்வாறான புகாா்கள் ஏதேனும் இருந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் செல்லிடப்பேசி எண் - 93848 08384-இல் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...