நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பில் மொத்த விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:45 pm

DIN

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பில் மொத்த விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து தொடா் புகாா்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பரக்கத் அலி தலைமையிலான அலுவலா்கள் கேஎல்ஏஎஸ் நகரிலுள்ள ஒரு வீட்டில் திடீா் சோதனை நடத்தினா். அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பில் கைப்பற்றப்பட்டன.

இதுதொடா்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.