ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாற்றுத் திறனாளிகளுக்கான தோ்தல் விழிப்புணா்வு

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணா்வு அளிக்கும் வகையிலான கையெழுத்து இயக்கம்

News image
Updated On :15 மார்ச் 2021, 8:04 pm

DIN

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு விழிப்புணா்வு அளிக்கும் வகையிலான கையெழுத்து இயக்கம் மற்றும் பிரசாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா். மாற்றுத் திறனாளிகள் பலரும் பிரசார வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்துப் பதாகையில் கையெழுத்திட்டனா். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இந்த வாகனம் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு, தோ்தல் வட்டாட்சியா் கலைமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.