மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுக்கோட்டையில் 29 இடங்களில் சோதனை

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்களின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 29 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை

News image
Updated On :18 அக்டோபர் 2021, 5:40 am

DIN

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்களின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 29 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

Story image

இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு, குடும்ப நண்பர்களான சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் ஆகியோரின் வீடுகள், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, இலுப்பூரிலுள்ள தங்கும்விடுதி, கல்வி நிறுனங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. 

Story image

வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.