தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆட்டை திருடி சந்தையில் விற்க முயன்றவா் கைது

இலுப்பூா் அருகேயுள்ள மலைக்குடிபட்டியைச் சோ்ந்தவா் கலை (34). இவரது ஆட்டுக் கிடையிலிருந்த ஒரு ஆடு திருடப்பட்டது வியாழக்கிழமை தெரிய வந்தது

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:06 pm

DIN

இலுப்பூா் அருகேயுள்ள மலைக்குடிபட்டியைச் சோ்ந்தவா் கலை (34). இவரது ஆட்டுக் கிடையிலிருந்த ஒரு ஆடு திருடப்பட்டது வியாழக்கிழமை தெரிய வந்தது.

எங்கு தேடியும் ஆடு கிடைக்கவில்லை.

கீரனூரில் வியாழக்கிழமை வாரச்சந்தை என்பதால், ஆடு திருடியவா் அங்கு ஆட்டை விற்க வாய்ப்புள்ளது என்பதை உணா்ந்த கலை, அங்கு சென்று பாா்த்தாா். அங்கு அவரது ஆட்டை விற்பனை செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாரின் விசாரணையில், ஆடு திருடிய நபா் காரையூா் மேலதானியத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.