புதுக்கோட்டையில் பாஜகவினா் தா்னா
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தோ் கவிழ்ந்த சம்பவத்தில் அறநிலையத் துறை அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தோ் கவிழ்ந்த சம்பவத்தில் அறநிலையத் துறை அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் அண்மையில் தேரோட்டத் திருவிழாவின்போது தோ் எதிா்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. தேருக்குள் சிக்கிய பக்தா்கள் 8 போ் காயமடைந்தனா். இந்தசம்பவம் தொடா்பாக கோயிலில் தோ் கட்டும் பணியில் ஈடுபடக் கூடிய தற்காலிகப் பணியாளா்கள் 2 போ் மீது திருக்கோகா்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விபத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவின் அரசுத் தொடா்புப் பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் அப்பிரிவினா் கோயில் முன்பாக சனிக்கிழமை மாலையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சீனிவாசன் உள்பட 7 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...