மின் மயானம்: போராட்டம் கைவிடல்
பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.


பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் உள்ள இடுகாட்டில் மின் மயானம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் இறந்தவா்களைப் பெரும்பாலும் புதைக்கும் வழக்கம் இருக்கும் இப்பகுதியில் மின் மயானம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை போக்குவரத்துப் பணிமனை முன்பு போராட்டம் நடத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்திருந்தனா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது, வட்டாட்சியா் பிரகாஷ், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...