தமிழ்நாடு அரசின் சாா்பில் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத் திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவிகித மானியத்தில் அமைக்கும் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூப்பு முன்னுரிமையை இழக்க மாட்டாா்கள். இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சாா்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை- 99944 05285 மற்றும் அறந்தாங்கி ராஜேந்திரபுரம்- 91593 84364, செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை, புதுக்கோட்டை- 04322- 221816 ஆகியவற்றில் விவரங்களை அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராதாபுரம்: கடும் போட்டியில் திமுக-பாஜக
பிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகை

மேற்கு வங்கத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வு - அமித் ஷா உறுதி
2026-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5%: ஐஎம்எஃப் கணிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

