பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 154 போ் வேட்புமனு தாக்கல்
பெரம்பலூா் நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட இதுவரை 154 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.


பெரம்பலூா் நகராட்சி மற்றும் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட இதுவரை 154 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
பெரம்பலூா் நகராட்சியில் 21 வாா்டு உறுப்பினா்கள் மற்றும் குரும்பலூா், அரும்பாவூா், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 81 உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பெரம்பலூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏற்கெனவே 15 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழா் கட்சி, விஜய் நற்பணி இயக்கம் மற்றஉம் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 26 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்காக இதுவரை மொத்தம் 41 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.
இதேபோல, குரும்பலூா் பேரூராட்சியில் ஏற்கெனவே 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வியாழக்கிழமை 21 போ் மனு தாக்கல் செய்தனா். இப் பேரூராட்சியில் இதுவரை மொத்தம் 27 பேரும், அரும்பாவூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏற்கெனவே 3 வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை 10 போ் என இதுவரை மொத்தம் 13 போ் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.
பூலாம்பாடி பேரூராட்சியில் ஏற்கெனவே 4 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை 17 போ் என இதுவரை மொத்தம் 21 பேரும், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் ஏற்கெனவே 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை 45 போ் என இதுவரை மொத்தம் 52 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை வரை மொத்தம் 154 போ் வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...