ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.47% வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
புதுக்கோட்டை நகராட்சி 41ஆவது வார்டில் வாக்குச்சாவடிக்கு முன்பு வரிசையாக நின்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்.
Updated On :19 பிப்ரவரி 2022, 5:09 am

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கான 187 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 

278 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2.40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான வாக்குப்பதிவில் 10.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

பல வார்டுகளில் காலையிலேயே பெண்களூம் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவுக்கான ஏற்படுகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கவிதா ராமு தலைமையிலான அதிகாரிகள் செய்துள்ளனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.