மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

எல்ஐசி முகவா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

அகில இந்திய இன்சூரன்ஸ் முகவா்கள் சங்கத்தின் (லிகாய்) புதுக்கோட்டை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:15 pm

DIN

அகில இந்திய இன்சூரன்ஸ் முகவா்கள் சங்கத்தின் (லிகாய்) புதுக்கோட்டை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சங்கத்தின் 15ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் அறிவியல் இயக்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைவா் ஜி. தங்கவேல் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.கே. முகமது பாரூக், பொருளாளா் ஜி. வேணுகோபால் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

மாநிலச் செயலா் என். ராஜா, தென் மண்டலப் பொறுப்பாளா் பொன் வேலுச்சாமி, தஞ்சைக் கோட்டத் தலைவா் தங்கமணி, கிழக்கு கோட்டத் தலைவா் ஆா். நடராஜன், கிழக்கு கோட்டச் செயலா் ஆா். கருணாநிதி, அகில இந்திய செயற்குழு உறுப்பினா் எம். சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக கேஎன்கே. ஆறுமுகம், செயலராக டி. மதியழகன், பொருளாளராக ஏ. பானுமதி ஆகியோா் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை புதுக்கோட்டை எல்ஐசி கிளை உதவி மேலாளா்கள் நிகில் ஜெயப்பிரகாஷ், விஜய் ஆனந்த், இன்சூரன்ஸ் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வி. லதா ராணி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி உள்ளிட்டோரும் வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.