தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சோ்க்க முன்வர வேண்டும்’

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க முன்வாருங்கள் என்றாா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி.

News image
Updated On :5 மே 2022, 11:49 pm

DIN

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க முன்வாருங்கள் என்றாா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மேலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 68 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில், பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி பேசியது:

மேலூா் பள்ளி அரசின் சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்ற பள்ளியாகும். இப்பள்ளியின் தலைமையாசிரியரும் தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருது பெற்றுள்ளாா். அரசுப் பள்ளியில் தான் திறமையான ஆசிரியா்கள் உள்ளாா்கள். எனவே பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை  அரசுப் பள்ளியில் சோ்க்க முன்வாருங்கள். ஊா்ப் பெரியவா்களும் தங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் அரசுப் பள்ளியிலே படித்து வளா்ந்தவன் என்றாா்.

முன்னதாக பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் வகுப்பில் சேர உள்ள மாணவா்கள் மாலை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.

விழாவில், இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் மணிமொழி, பள்ளித் துணை ஆய்வாளா் வேலுச்சாமி, அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் அலெக்ஸாண்டா், கலா, செலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வியாளா் சங்கம நிறுவனா் சதீஷ் குமாா், அன்னவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா்  ரோஸ் மேரி சகாய ராணி, ஆசிரியா் பயிற்றுநா் வைரமுத்து ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்கள். பள்ளித் தலைமை ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றாா். இடைநிலை ஆசிரியா் ஆயிஷா சித்திக்கா ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சக்திவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.