விராலிமலையில் திமுகவினா் கொண்டாட்டம்
திமுக அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, விராலிமலை சோதனைச் சாவடி அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


திமுக அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, விராலிமலை சோதனைச் சாவடி அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து பேருந்துப் பயணிகள், பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினா். மேலும், ஏழை எளியோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினா். முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவா் மு.பி. மணி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பழனியப்பன் ஆகியோா் அவ்வழியே வந்த சுமாா் 30 வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டா் பெட்ரோலை இலவசமாக வழங்கினா்.
விழாவில், பொறியாளா் அணி கணேசன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி குமாா்(வடுகபட்டி), உமா மகேஸ்வரி முருகேசன் (பூதகுடி), பாலசுப்பிரமணியன் (தென்னம்பாடி) ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பழகன், மல்லிகா செல்வம், ஒப்பந்தக்காரா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...