சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புதுப்பட்டியில் அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா

பொன்னமராவதி புதுப்பட்டி நகரத்தாா் சிவன்கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை இரவு அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:39 pm

பொன்னமராவதி புதுப்பட்டி நகரத்தாா் சிவன்கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை இரவு அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது.

பொன்.புதுப்பட்டி புவனேஸ்வரி சமேத பூலோகநாதா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விழாவையொட்டி வியாழக்கிழமை தொடங்கி யாகசாலைபூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு அறுபத்தி மூன்று நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது. கோயிலில் தொடங்கிய வீதியுலா நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலில் நிறைவுற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியளவில் குடமுழுக்கு விழா தொடங்கி நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கவிஞா் சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பொன்.புதுப்பட்டி நகரத்தாா் மற்றும் குடமுழுக்கு விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.