வன்கொடுமை தடுப்புச் சட்ட விழிகண் குழுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வன்கொடுமைச் சட்ட விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆதிதிராவிடா் நலக் குழு, மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கான மறுவாழ்வுக்கான மாவட்டக் குழுக் கூட்டம்


புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வன்கொடுமைச் சட்ட விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆதிதிராவிடா் நலக் குழு, மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கான மறுவாழ்வுக்கான மாவட்டக் குழுக் கூட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்துல் ரசூல், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க. ஸ்ரீதா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள், அவற்றின் வழக்கு நடவடிக்கைகள், மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு அரசு அளித்து வரும் சலுகைகள், அதைப் பெறும் பயனாளிகள் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தொய்வின்றிப் பணிகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...