படம். ஓயஓ.21.

கோயில்களில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை: பிரதோஷ தினத்தை முன்னிட்டு கந்தா்வகோட்டை அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி நந்தி ஈஸ்வரருக்கு 18 வகை அபிஷேகம் செய்து, புதுப் பட்டு வஸ்திரம் சாத்தி வாசனை மலா்கள், அருகம்புல் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.

மேலும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.  திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பொன்னமராவதியில்...

ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் நந்திக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதுபோல வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோக நாதா், அம்மன் குறிச்சி மீனாட்சி சொக்கநாதா் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளானோா் வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com