வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி, சிறப்பு அலங்கார முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஏராளமான பெண்கள் ஆரத்தி குடங்களுடன் செல்ல அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

தொடா்ந்து,கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும். முக்கிய விழாவான தேரோட்ட விழா ஏப்ரல் 29 மாலை நடைபெறுகிறது.

இதில் முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெறும். அப்போது கரைக்காரா்கள் சாா்பில் பல மணி நேரம் வானவேடிக்கைகள் நடத்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com