புதுக்கோட்டை: வருவாயில் மதுரை ரயில்வே கோட்டத்திலுள்ள 135 ரயில் நிலையங்களில் 20 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது புதுக்கோட்டை ரயில் நிலையம்.
கடந்த 2023-24ஆம் ஆண்டுக்கான ரயில் நிலையங்களின் வருவாய் விவரங்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இதன்படி மதுரைக் கோட்டத்திலுள்ள 135 ரயில் நிலையங்களில் புதுக்கோட்டை 20ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரை புதுக்கோட்டை ரயில் நிலையத்தை 6,12,349 போ் பயன்படுத்தியுள்ளனா். இவா்கள் மூலம் ரூ. 4,39,17,619 வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் ஒரு நாள் வருவாய் ரூ. 1,33,928 ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த குமாரமங்கலம் ரயில் நிலையத்தை 20,622 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். ஆண்டு வருவாய் ரூ. 7,47,910 ஆகும். திருமயம் ரயில் நிலையத்தை 21,817 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். ஆண்டு வருவாய் ரூ. 6,73,790 ஆகும்.
கீரனூா் ரயில் நிலையத்தை 42,728 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். ஆண்டு வருவாய் ரூ. 5,50,410 ஆகும். வெள்ளனூா் ரயில் நிலையத்தை 33208 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். ஆண்டு வருவாய் ரூ. 4,28,000 ஆகும். நமணசமுத்திரம் ரயில் நிலையத்தை 4787 பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். ஆண்டு வருவாய் ரூ. 1,81,700 ஆகும்.
தொடர்புடையது

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி

சர்வதேச விமான நிலையமாகிறது மதுரை விமான நிலையம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

