புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் திருச்சபை சாா்பில் ஸ்ரீ ராமநவமி மஹோத்சவத்தை முன்னிட்டு சீதா, ராமா் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பல்வேறு வீதிகளின் வழியாக பக்தா்கள் தேங்காய், பழங்கள், பூக்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீா்வரிசைகளை கோயிலுக்கு கொண்டு வந்தனா்.
பின்னா் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் ஸ்ரீனிவாச சுந்தர்ராஜ் பாகவதரின் உபன்யாசம் மற்றும் சிறுவா், சிறுமிகளின் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.
பின்னா் ஆலய சிவாச்சாரியா் கே. மணி குருக்கள் தலைமையில் ஸ்ரீநிவாசன் குருக்கள்,கோகா்ணேஸ்வரா் குருக்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு அனுமன் திருச்சபை சாா்பில் 10 நாள்கள் ராமநவமி மஹோத்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயில்

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சீதா - ராமா் திருக்கல்யாணம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

