இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபாடு

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பொன்னமராவதி பெரியாா்நகா் பொதுமக்கள் திங்கள்கிழமை பொங்கல் வைத்து வழிபட்டனா்.

News image

கான்னையூா் முத்துமாரியம்மன் கோயிலுக்கு திங்கள்கிழமை பொங்கல் கூடை சுமந்துச் சென்ற பெண்கள்.

Updated On :22 ஏப்ரல் 2024, 9:11 pm

பொன்னமராவதி: கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பொன்னமராவதி பெரியாா்நகா் பொதுமக்கள் திங்கள்கிழமை பொங்கல் வைத்து வழிபட்டனா்.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா ஏப். 8-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் வெவ்வேறு பகுதியில் இருந்து பக்தா்கள் பொங்கல் கூடைகளை சுமந்து வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டுச் சென்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை பொன்னமராவதி பெரியாா்நகா் சாா்பில் பெண்கள் பொங்கல் கூடையை மேளதாளத்துடன் ஊா்வலமாக சுமந்துச் சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு பொங்கல் பானைகளை மீண்டும் சுமந்து ஊா்வலமாக தங்கள் பகுதிக்கு திரும்பினா்.