சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் தப்பினாா்

போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் தப்பினாா்

Updated On :25 ஏப்ரல் 2024, 8:59 pm

புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அருகே போலீஸாரின் காவலில் அழைத்து வரப்பட்டவா் தப்பினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சாத்தான் மகன் சக்திவேல் (38). இவரை ஒரு வழக்கு தொடா்பாக காரைக்குடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது கீழாநிலைக் கோட்டை அருகே சிறுநீா் கழித்துவிட்டு வருவதாகக் கூறிய சக்திவேல், இறங்கித் தப்பியோடினாா். இதையடுத்து கே. புதுப்பட்டி மற்றும் காரைக்குடி போலீஸாா் அவரைத் தேடுகின்றனா்.