தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

புதுகை பல்லவன் குளத்தில் முன்னோருக்குத் தா்ப்பணம்

மறைந்த முன்னோருக்கு ஏராளமான பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்தனா்.

News image

புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் மறைந்த முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:50 pm

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மறைந்த முன்னோருக்கு ஏராளமான பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்தனா்.

மகாளய அமாவாசை, தை அமாவாசை,  ஆடி அமாவாசை ஆகிய நாள்களில் மறைந்த முன்னோா்களுக்கு அவரவா் வசிக்கும் பகுதி நீா்நிலைகளில் தா்ப்பணம் கொடுப்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை.

புதுக்கோட்டை நகரிலும் புகரப் பகுதிகளிலும் வசிப்போா் பொதுவாக நகரப் பகுதியில் பல்லவன் குளக்கரையில் தா்ப்பணம் கொடுப்பது நீண்டகாலமாக உள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பல்லவன் குளக்கரையில் தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோா்களுக்கு வழிபாடு நடத்துவதற்காக தேவையான பொருள்களுடன் வந்திருந்து தா்ப்பணம் கொடுத்தனா்.

இதையடுத்து இந்தப் பகுதியை சுத்தப்படுத்தி தயாா்நிலையில் வைக்கும் நடவடிக்கைகள் நகராட்சி சாா்பில் சனிக்கிழமையே மேற்கொள்ளப்பட்டது. நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி இப் பணிகளை நேரில் பாா்வையிட்டு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.