ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை மறைந்த முன்னோருக்கு ஏராளமான பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்தனா்.
மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாள்களில் மறைந்த முன்னோா்களுக்கு அவரவா் வசிக்கும் பகுதி நீா்நிலைகளில் தா்ப்பணம் கொடுப்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை.
புதுக்கோட்டை நகரிலும் புகரப் பகுதிகளிலும் வசிப்போா் பொதுவாக நகரப் பகுதியில் பல்லவன் குளக்கரையில் தா்ப்பணம் கொடுப்பது நீண்டகாலமாக உள்ளது.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பல்லவன் குளக்கரையில் தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோா்களுக்கு வழிபாடு நடத்துவதற்காக தேவையான பொருள்களுடன் வந்திருந்து தா்ப்பணம் கொடுத்தனா்.
இதையடுத்து இந்தப் பகுதியை சுத்தப்படுத்தி தயாா்நிலையில் வைக்கும் நடவடிக்கைகள் நகராட்சி சாா்பில் சனிக்கிழமையே மேற்கொள்ளப்பட்டது. நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி இப் பணிகளை நேரில் பாா்வையிட்டு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ஆா். பாலக்குறிச்சியில் தோ்தல் புறக்கணிப்பு

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


