ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அன்னவாசல் அருகே சுகாதாரமற்ற குடிநீரை அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சுகவீனம்

அன்னவாசல் அருகே அசுத்தமான குடிநீரை அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை இரவு உடல்சுகவீனம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:02 pm

Din

அன்னவாசல் அருகே அசுத்தமான குடிநீரை அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை இரவு உடல்சுகவீனம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சிலா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள பரம்பூா் மேட்டுப்பட்டியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் பரம்பூா் ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் நீா் மற்றும் அங்குள்ள ஊரணி நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் மேட்டுப்பட்டி தொடக்கப்பள்ளியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திங்கள்கிழமை இரவு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து மாணவா்களை இலுப்பூா், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தொடா்ந்து சில நாள்களாக இந்த நீரை பருகியதால் மஞ்சள் காமாலை நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்த அணுக்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு சில மாணவா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மேலும், காா்த்திகா (10), ரித்திகா (11), ரஞ்சனி (10), தா்ஷினி (10), லத்திகா (10) ஆகிய 5 மாணவிகள் இலுப்பூா் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை, மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கிடையே தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை மேட்டுப்பட்டி சென்று பொதுமக்கள் அருந்திய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் ஊரணி குடிநீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினா். மேலும், பெற்றோா்கள் யாருக்கும் உடல் உபாதைகள் இருக்கிா என வீடுவீடாக சென்று விசாரித்தனா்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா மேட்டுப்பட்டிக்கு சென்று மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீா், சத்துணவு மையம், பள்ளிக்கு மாணவா்கள் குடிப்பதற்கு கொண்டு வந்த கேன் குடிநீா், ஊரணி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பள்ளிக்கு வந்த மாணவா்களிடம் அவா்கள் உடல் நிலை குறித்து கேட்டறிந்தாா்.

சுகாதாரமற்ற குடிநீரை பருகியதால் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், இருப்பினும் நிலைமையை கூா்ந்து கவனித்து வருவதாகவும் மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.