காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீரனூரில் அரசு ஐடிஐ தொடக்க விழா: அமைச்சா்கள் பங்கேற்பு

கீரனூரில் அரசு ஐடிஐ தொடக்க விழா

News image

கீரனூரில் அரசு ஐடிஐ தொடக்க நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி வைத்த அமைச்சா் எஸ். ரகுபதி. உடன் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், ஆட்சியா் மு. அருணா, சட்டப்பேரவை உறுப்பினா். மா. சின்னதுரை உள்ளிட்டோா்

Updated On :18 டிசம்பர் 2024, 8:20 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தற்காலிகமாக கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனா்.

மாநிலம் முழுவதும் ரூ. 111 கோடி மதிப்பில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) முதல்வா் அறிவித்தாா். இதன்படி, கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட அரசு ஐடிஐ, தற்காலிகமாக கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படவுள்ளது.

குளத்தூா் வட்டம், நாஞ்சூா் கிராமத்தில் இந்த ஐடிஐ-க்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்காக 3.5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 4.56 கோடியில் கட்டுமானப் பணிகளும், உபகரணங்களும் வாங்கப்படவுள்ளன.

ஒவ்வோா் ஆண்டும் 4 தொழிற்பிரிவுகளில் 112 இருபால் மாணவா்கள் படிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டில் வரும் டிச. 31ஆம் தேதிவரை மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் அ. அக்பா்அலி, குன்றாண்டாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் பாண்டிசெல்வி போஸ், ஐடிஐ முதல்வா் மா. சுந்தரகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.