காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘இண்டி’ கூட்டணியின் ஆதரவுடன் திமுக தனித்தே ஆட்சியமைக்கும்: சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுடன் திமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:47 pm

Din

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுடன் திமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 2026 தோ்தலில் 5 முனைப் போட்டி இருக்கும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்து வருகிறாா். தோ்தலில் போட்டி என்றால், திமுக- அதிமுகவுக்கு இடையே இரு முனைப் போட்டிதான். 5 முனைப் போட்டியெல்லாம் இருக்காது. ‘இண்டி’ கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுடன் திமுக தனித்தே ஆட்சியமைக்கும்.

‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ இப்போதுள்ள சூழலுக்கு சாத்தியமில்லை. ஏற்க முடியாது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் சம்பவத்தில் 4 மாநிலங்கள் தொடா்பு இருப்பதால், சிபிஐ விசாரணை என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், மாநில சிபிசிஐடி போலீஸாா் விசாரணையை முடித்துவிட்டாா்கள். இனி மீண்டும் சிபிஐ விசாரிப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படும்.

அதானி விவகாரத்தை திசை திருப்புவதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதையாக மத்திய உள்துறை அமைச்சா் பேசியிருக்கிறாா். குழப்பத்தை ஏற்படுத்தி தங்களுக்கு சாதகமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவாா்கள்.

பாஜகதான் அம்பேத்கருக்கு ஆதரவாக இருப்பதாக இப்போது கூறுகிறாா்கள். அம்பேத்கா் முன்வைத்த மதச்சாா்பற்ற அரசு என்ற வரியை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் எனத் துடிப்பவா்கள்தான் பாஜகவினா். காங்கிரஸ் எப்போதும் இதை செய்ய முற்படவில்லை.

அம்பேத்கருக்கு உரிய மரியாதையை காங்கிரஸாா் கொடுத்து வந்திருக்கிறாா்கள். திராவிட இயக்கத்தினரும் அம்பேத்கருக்கு ஆதரவாகவே இருந்து வருகிறோம் என்றாா் ரகுபதி.