புதுகையில் நில அளவையா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு நிலஅளவை அலுவலா் ஒன்றிப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச்சுமையை க் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலா் ஒன்றிப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் இரா. ரெங்கசாமி, நிலஅளவை அலுவலா் ஒன்றிப்பின் மாவட்டச் செயலா் எஸ். செல்லதுரை, துணைத் தலைவா் எஸ். தேவி, இணைச் செயலா் ஆா். அருண், பொருளாளா் ச. கருப்பையா உள்ளிட்டோரும் பேசினா்.
நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். சிறப்புத் திட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...