காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாயுமானவா் திட்டம் அலுவலா்களுக்கு பயிற்சி

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள 71,149 குடும்பங்களில் மேற்கொள்ள வேண்டிய கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:01 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள 71,149 குடும்பங்களில் மேற்கொள்ள வேண்டிய கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

மாநிலம் முழுவதும் சுமாா் 5 லட்சம் வறிய குடும்பங்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து வழங்குவது தாயுமானவா் திட்டம்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறத்தில் 59,736 குடும்பங்களும், நகா்ப்புறத்தில் 11,413 குடும்பங்களும் என மொத்தம் 71,149 குடும்பங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குடும்பங்களில் மேற்கொள்ள வேண்டிய கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியை மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி ஒருங்கிணைத்தாா்.