குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கடல் உயிரினங்களைக் காக்க விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

கடல் உயிரினங்களைக் காக்க விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

News image

புதுக்கோட்டை மணமேல்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கடற்பசுப் பாதுகாப்பகம் குறித்த பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

கடல் உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடலோரக் கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றாா் மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கடற்பசு பாதுகாப்பு குறித்த அரசுத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுப் பயிற்சியைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியது: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முதல், புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வரை கடற்பசுப் பாதுகாப்பகமாக கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 42.8 கிமீ நீளக் கடற்கரையிலுள்ள கடலோரக் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு அழிந்து வரும் கடவாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கடலோர மக்களின் விழிப்புணா்வுதான் கடல்வாழ் உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாக்கும். கிராமங்களில் மாலை நேரங்களில் இதற்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும். அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம் என்றாா் கணேசலிங்கம். நிகழ்ச்சியில் அறந்தாங்கி வனச்சரக அலுவலா் து. மணிவெங்கடேஷ், மீன்வளத் துறை சாா் ஆய்வாளா் கனகராஜ், மணமேல்குடி காவல் உதவி ஆய்வாளா் முருகையன், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் துறைப் பேராசிரியா் பரமசிவம், ஓம்காா் தொண்டு நிறுவன இயக்குநா் பாலாஜி, இந்திய வன உயிரின ஆராய்ச்சியாளா் ஸ்வேதா அய்யா் ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைவா்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறையினரும் கலந்துகொண்டனா்.