குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விராலிமலை பகுதிகளில் 9 கண்காணிப்பு கேமராக்கள்

விராலிமலை பகுதிகளில் 9 கண்காணிப்பு கேமராக்கள்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 6:39 am IST

விராலிமலை சுற்றுப்பகுதியில் குற்றங்களை கண்காணிக்கும் விதமாக தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட 9 கண்காணிப்பு கேமராக்களின் தொடக்கவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வா்த்தகா்கள், தொழில் நிறுவனங்கள் உதவியோடு கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படுவதன் தொடா்ச்சியாக விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனமான ஐடிசி நிறுவனம் தனது சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) நிதியின் மூலம் 9 கேமராக்கள் மற்றும் தொடா்புடைய கருவிகளை ரூ.5 லட்சத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் விராலிமலை காவல் நிலையத்திற்கு வழங்கியது.

இதையடுத்து அந்த கேமராக்களை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலை பிரிவு சாலை, ராஜாளிபட்டி ஜங்சன், புதுப்பட்டி சாலை ஜங்சன் ஆகிய இடங்களில் பொருத்தி, அதன் தொடக்கவிழா விராலிமலை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிஎஸ்பி காயத்ரி கண்காணிப்பைத் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் ஐடிசி பொதுமேலாளா் விஸ்வநாத், அடமின் மேலாளா் சுரேஷ், காவல் ஆய்வாளா் கதிரவன், துணை ஆய்வாளா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.