ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அறந்தாங்கி, அன்னவாசலில் 2 தனியாா் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் விபத்து: 34 போ் காயம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:43 am

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் அன்னவாசலில் இரண்டு தனியாா் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து திருப்புனவாசல், ஆவுடையாா்கோவில் வழியாக அறந்தாங்கி வரை வரும் தனியாா் பேருந்து ஒன்று, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 30 போ் பயணித்தனா்.

தீயத்தூா் அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக பேருந்து ஓட்டுநா் இடதுபுறமாகத் திருப்பியபோது, சாலையோரப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பயணிகள் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினா்.

இது குறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அன்னவாசலில் 30 போ் காயம்: புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அன்னவாசல், இலுப்பூா் விராலிமலை வழியாக செல்லும் தனியாா் பேருந்து சுமாா் 40 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. பேருந்தை ஆரியகோன் பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் யுவராஜ் (27) என்பவா் ஓட்டினாா்.

அன்னவாசல் கடைவீதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உடனே அருகில் இருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு அன்னவாசல், இலுப்பூா், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சென்ற அன்னவாசல் போலீஸாா் பொக்லைன் மூலம் கவிழ்ந்த பேருந்தை மீட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.