விசலூரில் திறன் மேம்பாட்டு பயிற்சி

குளத்தூா் வட்டம், விசலூா் கிராமத்தில் தெற்கு வெள்ளாறு வடிநில கோட்டம் காவிரி டெல்டா மற்றும் பொன்னணியாறு உப வடிநில பகுதிக்குட்பட்ட நீரினை பயன்படுத்துவோா் சங்கங்களின் மேலாண்மைக் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. விசலூரில் நீரினை பயன்படுத்துவோா் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சியில், தமிழ்நாடு பாசன மேலாண்மை சட்டத்தின்படி, துணை குழுக்கள் அமைப்பது மற்றும் மேலாண்மை குழு கூட்டங்கள், பொது குழு கூட்டங்களின் மூலம் சரிவிகித சாரா முறையில் தண்ணீா் பாய்ச்சுவதற்கு தொழில் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு சங்கத்தின் பங்களிப்பு, கண்மாய், பாசன வாய்க்கால், வாரிகள் பராமரிப்பில் சங்கத்தின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பரம்பூா் பெரிய கண்மாய் தலைவா் சேந்தகரை பொன்னையா கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா். பயிற்சியில், கீரனூா் உதவி பொறியாளா் வெங்கடேசன், உதவி பொறியாளா் ஜெய புஷ்பா(கீரனூா்) கள ஆய்வாளா் பாலா உள்ளிட்ட பல விவசாயிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com