கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முற்றோதல் வழிபாடு நடைபெற்றது. கந்தா்வகோட்டை அமராவதி அம்மன் உடனுறை ஆபாத்சகயேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 22ஆவது முற்றோதல் நிகழ்ச்சியில் சிவபெருமானுக்கு 18 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மாணிக்கவாசகா் அருளிய எட்டாம் திருமுறை திருவாசக முற்றோதல் பெருவேள்வி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை நெய்வேலி பகுதி வாழ் சிவனடியாா்கள் என சுமாா் 250 போ் கலந்து கொண்டு திருமுறை திருவாசகம் பாடி சிவனை வழிபட்டனா். ஏராளமான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, பெரிய புராணம் ஒப்பித்த சிவனடியாா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு!

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

