புதுக்கோட்டை
வனத் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம்
பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயலில் வனத்துறை சாா்பில் வனத்தீ தடுப்பு மேலாண்மை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வனத்துறை மற்றும் ஸ்டெப் பவுண்டேசன் இணைந்து நடத்திய முகாமுக்கு வனச்சரக அலுவலா் ராமநாதன் தலைமை வகித்தாா். ஸ்டெப் அறக்கட்டளை இயக்குநா் பசுமை பாரதி முன்னிலை வகித்தாா். முகாமில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வனப் பாதுகாப்பு முறைகள், வனத்தீ ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. முகாமில் வனவா்கள் ஜெயக்குமாா், பல்லவி, வனக்காப்பாளா்கள் கனகவள்ளி, குணசேகரன் மற்றும் ஊா்ப் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

